“காதலில் சிக்கி நாட்டைகாட்டி கொடுத்த”ராணுவவீரர்..! அதிர்ந்த ராணுவம்..!!

Default Image

பாகிஸ்தான் பெண்ணின் காதல் வலையில் சிக்கி பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட நொய்டாவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related image

2006-ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்பு படையில் சேர்ந்த அச்சுதானந்த் மிஸ்ரா என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு 2016-ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related image

அந்தப் பெண்ணிடம் அவர் படை இருக்கும் இடம், ஆயுத விவரங்கள், மற்றும் எல்லைப் பாதுகாப்புப்படை முகாமின் புகைப்படங்களை வாட்ஸ் அப் எண்ணில் பகிர்ந்துகொண்டதாகவும்  அந்தப் எண்ணுக்கு பாகிஸ்தான் தோழி என பெயரிட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.இது இந்திய ராணுவத்தை அதிரவைத்துள்ளது.

Related image

 

தனது குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவரது போன் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளில் ஆதாரங்களும் சிக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள போலீசார், விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்