Categories: இந்தியா

உத்ரகாண்ட்டில் பரவிய காட்டுத்தீ..! களத்தில் இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்.! 3 பேர் கைது.!

Published by
மணிகண்டன்

Forest Fire : உத்ரகாண்ட்டில் பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவ ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் காட்டுத்தீ அதிகளவில் பரவும் சூழல் நிலவும். எனவே அதனை கருத்தில் கொண்டு, காட்டு பகுதியில் தீப்பற்றக்கூடிய பொருட்களோ, அல்லது சிறிய அளவில் தீ மூட்டுவதோ கூட பெரிய அளவிலான காட்டுதீக்கு வழிவகுத்து விடும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில், நைனிடா பகுதியில் காட்டுத்தீ பரவி தற்போது அதனை தணிக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தீயை அணைக்கும் முயற்சியில் ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது . இதற்காக IAF MI-17எனும் ராணுவ ஹெலிகாப்டர் நைனிடா பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

இதுவரை, உத்தரகண்ட், குமாவோன் பகுதியில் 26 தீ சம்பவங்களும், கர்வால் பகுதியில் 5 தீ சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதுவரை மொத்தமாக 33.34 ஹெக்டேர் வனபகுதி பாதிக்கப்பட்டுள்ளன. இந்த காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருந்ததாக கூறி,  ஜகோலி மற்றும் ருத்ரபிரயாக் பகுதிகளில் காட்டுப்பகுதியில் தீவைத்ததாக சந்தேகிக்கப்படும் 3 நபர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் நரேஷ் பட் என்பவர் மட்டுமே, தங்களிடம் உள்ள செம்மறி ஆடு மேய்ச்சலுக்காக, புல் பயிரிட பழைய புல் பயிர்களுக்கு தீயை பற்றவைத்ததாக ஒப்புக்கொண்டார். மற்றவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  காட்டு தீ அதிகம் பரவி வரும் காரணத்தால், நைனி நதிக்கரையில் படகு சவாரி தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல், உத்தரகண்ட் மாநிலத்தில் 575 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காட்டுத்தீயால் இதுவரை 689.89 ஹெக்டேர் வனப்பகுதி சேதமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

4 minutes ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

9 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

11 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

12 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

12 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

14 hours ago