ஜம்மு -காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து..!

ஜம்மு -காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு -காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஷிவ்கர் தார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இரண்டு நபர்கள் இருந்ததாகவும், உதம்பூர் பகுதியில் கடும் மூடுபனி காரணமாக அப்பகுதியில் பார்வை குறைந்துள்ளதாகவும், இதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதா அல்லது விமானி கவன குறைவு காரணமாக விபத்துக்குள்ளானதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விமானி மற்றும் இணை விமானி இருவரும் காயமடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025