Categories: இந்தியா

அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து..! 2 விமானிகள் உயிரிழப்பு..!

Published by
செந்தில்குமார்

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ சீட்டா ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இரு விமானிகளும் உயிரிழந்தனர். 

அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சீட்டா (Cheetah) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 9:15 மணியளவில் அருணாச்சலப் பிரதேசத்தின் செங்கே கிராமத்தில் இருந்து மிஸ்ஸமாரிக்கு சென்று கொண்டிருந்த போது ராணுவ ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுடனான தகவல் தொடர்பை இழந்துள்ளது. பின்னர் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சீட்டா விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் பயணம் செய்துள்ளனர். விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இராணுவம், காவல்துறையின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விமானிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சில மணிநேர தேடலுக்கு பிறகு விபத்தில் சிக்கிய இரு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டரின் பாகங்கள் மண்டலா கிழக்கே பங்களாஜாப் கிராமத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

45 minutes ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

1 hour ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

1 hour ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

2 hours ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

2 hours ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

3 hours ago