தீவிரவாதிகளுடன் கெத்தாக போராடிய ‘ஜூம்’ ராணுவ நாய்!!
ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் ஜூம் என்ற ராணுவ நாய் தன் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையிலும் தொடர்ந்து போராடியது.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையில் நடந்த தாக்குதலில் ஜூம் என்ற ராணுவ நாய் குண்டு அடிபட்டது. காஷ்மீரின் தெற்கு பகுதியான டாங்பவா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்த பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த பகுதியைச் சுற்றி வளைத்தனர்.
அதன் பிறகு ஜூம் என்ற ராணுவ நாய் குடியிருப்புப்பகுதிக்குள் தேடுவதற்காக அனுப்பப்பட்டது. தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை அறிந்து அவர்களை “ஜூம்” தாக்கியது. அதன் பின் அவ்ரகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஜூம் காயப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள மிலிட்டரி கால்நடை மருத்துவமனையில் ஜூம் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
மேலும் ஜூம் தான் காயப்பட்டிருந்த நிலையிலும் தீவிரவாதிகளுடன் தொடர்ந்து போராடியது. இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
We wish Army assault dog ‘Zoom’ a speedy recovery. #Kashmir@adgpi@NorthernComd_IA pic.twitter.com/i1zJl0C2Gw
— Chinar Corps???? – Indian Army (@ChinarcorpsIA) October 10, 2022