காஷ்மீரில் தீவிரவாதிகளுன் துப்பாக்கி சூடு… இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை… இந்திய தரப்பில் இராணுவ கர்னல், மேஜர் உட்பட் 5 பேர் வீர மரணம்…

உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிவரும் சூழலில் இந்தியா மனித இன விரோத சக்திகளான தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வருகிறது. இதில், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவின் பகுதிகளுக்குள் ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த திடீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த எதிர்பாராத திடிர் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த கடும் துப்பாக்கி சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதேசமயம் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இராணுவ கர்னல், மேஜர், இரண்டு வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவலர் ஒருவர் என ஐந்து பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.