சத்தீஸ்கரில் உள்ள தேசிய பூங்காவில் அரியவகை ஆரஞ்சு நிற வௌவால் மற்றும் அழிந்து வரும் ஓநாய் இனமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலூட்டி விலங்குகளில் மிகவும் அரிதான ஒன்று தான் வௌவால். ஏனென்றால் வௌவால் மட்டுமே பறக்கும் பாலூட்டி ஆகும். இத்தகைய அம்சம் கொண்ட வௌவால்களில் அரிதான ஆரஞ்சு நிற வௌவால் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கங்கேர்காட்டி தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வனவிலங்கு பாதுகாப்பு பட்டியலில் அழிந்து வரும் நிலையில் உள்ள ஓநாயும் காணப்படுவதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து கங்கேர்காட்டி தேசிய பூங்காவின் இயக்குனர் கன்வீர் தரம்ஷீல் கூறுகையில், ஓநாய்களை பாதுகாக்கவும், வனவிலங்குகளை காப்பாற்றவும் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விலங்குகள் குறித்து மக்கள் பார்வையிடுவதற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் தனித்தன்மை வாய்ந்த மற்றும் அரியவகை வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க காட்டின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்களை பொறுத்தியுள்ளனர். அதில் விலங்குகளின் வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் பதிவாகி வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…