Zoom செயலியின் 5 லட்சம் பயனாளர்களின் கணக்குகளை 0.15 பைசாவிற்கு விற்ற ஹேக்கர்கள்.!

Default Image

Zoom App என்ற செயலியை பயன்படுத்துபவர்கள் தகவல்கள் திருடப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்விளைவாக வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் பலர் காணொளி காட்சி மூலமாக கூட்டங்கள் நடத்த உதவுவது Zoom App என்ற செயலி .கடந்த 10 நாட்களுக்கு மேலாக இந்த செயலியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. காணொளி கூட்டம்,குரல் அழைப்புகள், தனிப்பட்ட செய்திகள் அனுப்புவது உள்ளிட்ட வசதிகள் உள்ளது.
மேலும் இந்த செயலியில் புதிதாக கணக்கு தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.இந்நிலையில் Zoom செயலியின் 5 லட்சத்திற்கு மேற்பட்ட  கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு dark web-ல் விற்பனை செய்யப்படுவதாக ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.
ஹேக்கர்கள் இந்த Zoom கணக்குகளை இலவசமாக விற்கிறார்கள் என்று ஸ்லீப்பிங்   ஒரு கணக்கிற்கு 0.0020 டாலர் (சுமார் ரூ.0.15)-க்கு விற்கப்படுவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளது.
இந்தியன் கம்ப்யூட்டர் எமெர்ஜென்சியும்,தேசிய சைபர் பாதுகாப்பு மையமும் Zoom செயலில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.கூகுள்,டெஸ்லா,நாசா சில கல்வி நிறுவனங்கள் இந்த செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மேலும் இந்த செயலியை பயன்படுத்தி சிங்கப்பூரில் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு ஆசிரியர்  பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென அதில் ஆபாச புகைப்படங்கள் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது ஹேக்கர்களின் அத்து மீறி இருக்கக்கூடும் என எண்ணி   சிங்கப்பூர் கல்வி அமைச்சகமும் இந்த செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்