முதலில் நீங்கள் நாட்டு மருந்துக்களை பயன்படுத்துகிறீர்களா??ஹர்ஷ் வர்தனை வறுத்த இந்திய மருத்துவ சங்கம்

Default Image

கோவிட்19-க்கான ஆயுஷ் தரநிலை சிகிச்சை நெறிமுறைகளை தொடங்க அனுமதி அளித்த மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் முதலில்  ஆயுர்வேத மருத்துக்களை எடுத்துக்கொள்கிறாரா? என இந்திய மருத்துவ சங்கம் (IMA) சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் தனது IMA கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு ம.,அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளது. 

இது குறித்து IMA வெளியிட்டுள்ள தகவல்:

(ஹர்ஷ் வர்தன்) ஆயுஷ் ஆயுர்வேத சிகிச்சைக்கு ஆதரவாக நிறுவனங்களின் சுவாரஸ்யமான பெயர்களை எல்லாம் அடிக்கோடிட்டு காட்டுகிறார். இவை அனுபவச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்,  சான்றுகள் அனைத்தும் தனிப்பட்ட அனுபவம் மற்றும் தனிப்பட்ட அகநிலை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று ஒப்புக்கொள்கிறார். எனவே விஞ்ஞான நீதியில் நிரூபிக்கப்படாமல் ஒரு சிகிச்சை முறை அனுபவத்தில் அடிப்படையில் ஆனதாக இருக்கலாமா? அவர் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையானால் நாட்டு மக்களை ஆபத்தில் தள்ளுகிறார் என்றே பொருள் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய சுகாதாரத்துறையினர்கு  5 கேள்விகளை முன்வைத்துள்ளது

1. ஆயுஷ் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மருத்துவத்தில்  குணமடைதலுக்கு திருப்திகரமான ஆதாரம் உள்ளதா? அவ்வாறு இருந்தால், அது பலவீனமாக உள்ளதா, அல்லது நடுத்தர நிலையில் உள்ளதா? (அ) வலுவாக உள்ளதா?

2. கோவிட்19-ன் தீவிரமான நிலை, ஹைபர் இம்யூன் நிலையில் உள்ளதா? (அ) நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் உள்ளதா?

3. கோவிட் சிகிச்சைக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள, அமைச்சகத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்களா?

4. பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் சுகாதாரத்துறையைச் சேர்ந்த எத்தனை பேர் சிகிச்சை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளார்கள்?

5. கொரோனா சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு ஆயுஷ் அமைச்சகத்துக்கே கொடுப்பதிலிருந்து சுகாதாரத்துறை அமைச்சரை எது தடுக்கிறது? என்று இந்திய மருத்துவ சங்கம் சரமாரியாக  கேள்விகளை சுகாதாரத்துறைக்கு எழுப்பியுள்ளது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்