நீங்கள் SBI வாடிக்கையாளரா?? அப்போ உடனே இதை செய்யுங்கள்.. இல்லையெனில்….

Default Image

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் வாங்கி கணக்கை ஆதார் என்னுடன் இணைக்கவில்லை என்றால் பணப் பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து வகையான வங்கிகள் சேமிப்பு கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தெரிவித்துள்ளார். அதன்படி பலரும் தங்களின் இணைக்கத் தொடங்கினார்கள். இதுவே நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களாக இருந்தால், உங்கள் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம்.

மேலும், SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் வாங்கி கணக்கை ஆதார் என்னுடன் இணைக்கவில்லை என்றால் பணப் பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் (SBI வாடிக்கையாளர்கள்) உங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை எளிதாக பல வழிகளில் இணைத்துக்கொள்ளலாம்.

இணையதளம் வாயிலாக இணைக்கலாம்:

நீங்கள் SBI-இணைய வழி சேவையை பயன்படுத்துவோரா?? அப்படியென்றால் இது உங்களுக்கு மிக எளிதான ஒன்று.

  • இதனை செய்ய நீங்கள், www.onlinesbi.com என்ற வலைத்தளத்திற்கு செல்லவும். அதன்பின் e-Services எனும் வசதியை தேர்வு செய்யவும்.
  • அதன்பின் update aadhar with bank accounts எனும் வசதியை தேர்வு செய்து, உங்களின் கடவுச்சொல்லை பதிவு செய்து, உள்ளே நுழையவும்.
  • உங்களின் ஆதார் எண்னை இரண்டு முறை பதிவு செய்து, submit-ஐ தேர்வு செய்யவும்.
  • உங்கள் மொபைல்க்கு ஒரு SMS வரும்.
  • அவ்வாறு வந்துவிட்டால், உங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைந்துவிட்டது.

ATM மூலம் இணைக்கலாம்:

உங்களுடன் ஆன்லைன் பேங்கிங் இல்லையென்றால், உங்களின் ஏடிஎம் கார்ட் மூலமாகவும் இணைத்துக்கொள்ளலாம்.

  • அதற்கு முதலில் SBI ATM-க்கு செல்லவும். உங்களின் ஏடிஎம் கார்ட்-ஐ ஸ்வைப் செய்து, பின் நம்பரை உள்ளிடவும்.
  • அதன்பின் “Service Registration” எனும் வசதியை தேர்வு செய்யவும். பின்னர் “Aadhar registration” வசதியை தேர்வு செய்யவும்.
  • அடுத்த, கணக்கு, நடப்பு அல்லது சேமிப்பில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.
  • உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். அதனை உறுதிப்படுத்த, மீண்டும் உள்ளிடவும்.
  • இதன்மூலமாகவும் உங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

SMS மூலமாகவும் இணைக்கலாம்:

மேற்கண்ட அந்த இரண்டு முறைகளை விட, இது மிகவும் எளிதான ஒன்று. இதற்கு தேவை, ஒரு செல்போன்.

  • முதலில் உங்கள் வங்கி கணக்குடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் UID <space> <ஆதார் எண்> <கணக்கு எண்(bank account number)> என டைப் செய்து, 567676 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.
  • அதன்பின் உங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைந்துவிட்டதாக உங்களுக்கு செய்தி கிடைக்கும்.

SBI செயலி மூலம்:

நீங்கள் இதனை SBI மொபைல் செயலி மூலமாகவும் இணைக்கலாம்.

  • முதலில் செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் லாகின் (login) விபரங்களை என்டர் செய்யவும்.
  • கீழே வந்தால், CIF எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, அதனை உறுதிப்படுத்த மறுபடியும் ஆதார் எண்ணை உறுதிப்படுத்தவும்.
  • விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்து டிக் செய்து, submit-ஐ கொடுக்கவும்.
  • உங்கள் ஆதார் எண் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செய்தி வரும்.
  • பின்னர் ok கிளிக் செய்தால் போதும்.

வங்கிக்கு சென்று இணைக்கலாம்:

  • இந்த நாங்கு முறைகள் மூலம் இணையாவிட்டால், நேரடியாக உங்கள் அருகிலுள்ள SBI வங்கிக்குச் செல்லுங்கள்.
  • வங்கிக்கு செல்லும்போது மறக்காமல் ஆதார் அட்டை xerox மற்றும் original ஆதார் அட்டையை எடுத்து செல்லுங்கள்.
  • அங்கு ஆதார் இணைப்பு படிவத்தை எடுத்து நிரப்பி, ஆதார் xerox-உடன் சமர்ப்பிக்கவும்.
  • அதன்பின் அங்கிருக்கும் ஊழியர், உங்கள் கையில் ஒரு ரசீதை கொடுப்பார்.
  • பின்னர் உங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படும்.

மேற்கண்ட அனைத்து முறைகளையும் பின் தொடர்ந்தால், உங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay