வரி செலுத்துபவரா நீங்கள்..? இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்..! மத்திய அரசு எச்சரிக்கை..!

TaxRefundScam

வரி திருப்பிச் செலுத்தும் மோசடி குறித்து வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் இணைய பாதுகாப்பு அமைப்பு (Cyber Dost) தனது ட்விட்டர் பக்கத்தில், வரி செலுத்துவது சம்பந்தமான மோசடிகள் குறித்து எச்சரிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மொபைல் போனில் வரும் சந்தேகத்திற்கிடமான வரி தொடர்பான செய்திகளில் உள்ள  இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று வரி செலுத்துவோருக்கு வலியுறுத்தியுள்ளது.

இந்த மோசடியில் வரி செலுத்துவோருக்கு வரி கட்டுவது தொடர்பான மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. அதில் வரும் இணைப்பை கிளிக் செய்வதால் போலி வருமான வரி இணையதளத்திற்கு திருப்பி விடப்படுகிறார்கள். இணையதளத்தில் தங்கள் வங்கி விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை உள்ளிட்டுவிட்டால், அவை பதிவு செய்யப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், இந்த மோசடி குறித்து http://cybercrime.gov.in என்ற இணையத்தளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணிற்கோத் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்று இணைய பாதுகாப்பு அமைப்பு (Cyber Dost) தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்