குடியரசு தினவிழா சிறப்பு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவரா நீங்கள்..? உங்களுக்காக தான் இந்த பதிவு..!
குடியரசு தினவிழா சிறப்பு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கானபதிவு.
ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தேசிய கோடி ஏற்றி, மாணவர்கள் மத்தியில் சிறப்பு போட்டிகள் வைத்து சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கவிதைப்போட்டி போன்ற போட்டிகளை வைப்பதுண்டு. அவ்வாறு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்காக தான் இந்த பதிவு.
பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கவனத்திற்கு..!
பொதுவாக பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பெரும்பாலும் தலைப்புகள் வழங்கப்பட்டாலும், சிலருக்கு தலைப்புக்கள் வழங்கப்படுவதில்லை. அப்படியே தலைப்புக்கள் வழங்கப்பட்டாலும், குடியரசுதினம் மற்றும் தேச தலைவர்கள் பற்றிய தலைப்புக்கள் தான் வழங்கப்படுவது வழக்கம். தற்போது இந்த பதிவில் குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிக்கான சிறப்பு குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
குடியரசு தினம் என்றால் என்ன?
உலகின் பெரும்பாலான நாடுகளில் முந்தைய காலங்களில் மன்னராட்சி முறை இருந்தது. இந்த மன்னர் ஆட்சி முறையில் பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே மக்களை ஆட்சி செய்து வந்தது. இந்த ஆட்சிக்கு மாற்றாக உருவான ஆட்சி முறை தான் குடியரசு ஆட்சி.
குடியரசு ஆட்சி என்பது மக்களாட்சி முறையாகும். இந்த ஆட்சியில் தலைவராக ஜனாதிபதி செயல்படுவார். இந்த குடியரசுத் தலைவரை மக்கள் நேரடியாகவோ அல்லது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவும் தேர்வு செய்வர். அந்த வகையில் நமது நாட்டை பொறுத்தவரையில் தற்போது குடியரசு ஆட்சி தான் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்திய அரசியல் தலைவர்கள் குடியரசு ஆட்சி முறை தான் இந்திய நாட்டிற்கான சிறந்த ஆட்சி முறை எனக் கருதி ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு இந்திய நாட்டை குடியரசு நாடக அறிவித்தனர்.
அந்த வகையில், நமது நாடு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றாலும் இந்த சுதந்திரத்தை நமக்கு பெற்று தருவதற்காக பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள், அகிம்சை முறையிலும் ஆயுதம் ஏந்தியும், இரத்தம் சிந்தியும் தங்களது உயிரையே தியாகமாக ஈந்தும் சுதந்திரத்தை பெற்று தந்துள்ளனர்.
இந்த தியாகிகளின் தியாகங்களை போற்றும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் இருக்கின்ற ராஜபாதை சாலையில் இந்திய முப்படைகள் உள்ளிட்ட பலவகையான அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம். இந்த குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியை இந்திய குடியரசுத் தலைவர் தலைமை தாங்குகிறார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் முப்படைகளில் நாட்டுக்காக சேவை புரிந்து உயிர் நீத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் நாட்டின் சிறப்பான சேவைகளை புரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் வீரதீர செயல்களை புரிந்த நாட்டின் குடிமக்களுக்கும் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுவது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.