பொய் சொல்வது லடாக் மக்களா ? பிரதமரா ? ராகுல் காந்தி
லடாக் விவகாரத்தில் பொய் சொல்வது லடாக் மக்களா ? பிரதமரா ? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டு இருந்து.இதனிடையே தான் இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது.இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர்.இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்து உள்ளது .தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது.ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது .
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் , லடாக் மக்களின் பேட்டிகளைகொண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், லடாக்கில் உள்ள மக்கள் நமது மண்ணை சீனா ஆக்கிரமித்து உள்ளதாக கூறுகிறார்கள். நமது மண்ணை யாரு ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறி வருகிறார். இந்த விவகாரத்தில், யாரோ ஒருவர் பொய் சொல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.