#Fact Check: கொரோனாவால் புகைபிடிப்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் குறைவாக பாதிக்கப்படுகிறார்களா..?

Default Image

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலைகளை கையாண்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுநோயைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் கூறியதாக பகிரப்பப்டும் ( CSIR) வெளியிட்டதாக வெளியான ஒரு அறிக்கையில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் மற்றும் புகைபிடிப்பவர்கள் கொரோனாவிற்கு குறைவாக பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இது குறித்து,பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தனது ட்விட்டரில் கடந்த மாதம் 26-ஆம் தேதி வெளியிட்ட பதிவில், CSIR வெளியிட்ட அறிக்கையில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் மற்றும் புகைபிடிப்பவர்கள் கொரோனாவிற்கு குறைவாக பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்ட தகவலை மறுத்துள்ளது.

CSIR வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி சைவ உணவு மற்றும் புகைபிடித்தல் கொரோனாவிலிருந்து பாதுகாக்கக்கூடிய செரோலாஜிக்கல் ஆய்வுகளின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் ஏப்ரல் 24, 2021 வெளியான பத்திரிகை குறிப்பை சி.எஸ்.ஐ.ஆர் வெளியிடவில்லை என பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது.

இது போன்ற ஆய்வுகளில், எந்தவொரு அளவுருவுடனான தொடர்புகளும் சோதனை ரீதியாக நிரூபிக்கப்படும் வரை காரணியாக கருதப்படக்கூடாது. எனவே, இந்த ஆய்வுகளின் அடிப்படையில் சைவ உணவு மற்றும் புகைபிடித்தல் கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்படலாம் என்று எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று சி.எஸ்.ஐ.ஆர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இணையத்தில் நிலவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளைத் தடுப்பதற்காக PIB Fact Check கடந்த 2019 டிசம்பரில் அறிமுகமானது. அதன் நோக்கம் பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காண்பது ஆகும். இதுபோன்ற தவறான தகவல்களைப் பற்றி அரசு மக்களுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சரியான தகவல்களை மட்டுமே நம்பும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்