தடுப்பூசி பற்றாக்குறை குறித்து புகார் அளித்த அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களும் பொய் சொல்கிறார்களா? – ப.சிதம்பரம்

Published by
லீனா

தடுப்பூசி பற்றாக்குறை குறித்து புகார் அளித்த அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களும் பொய் சொல்கிறார்களா? என ப.சிதம்பரம் ட்வீட்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்தும், கொரோனா தடுப்பு நடைமுறைகள் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது  தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புதிய மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இதற்கு முன் இருந்த அதிகாரிகள் நடந்து கொண்டதுபோல தான் நடந்து கொள்கிறார். தடுப்பூசி பற்றாக்குறை குறித்து ஒவ்வொரு மாநிலங்களும் புகார் அளிக்கிறது. தடுப்பூசி மையங்களில், “NO VACCINES” என்ற பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்த வரும் மக்கள், தடுப்பூசி போடாமல் வீடு திரும்புகின்றனர்.

தடுப்பூசி பற்றாக்குறை குறித்து புகார் அளித்த அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களும் பொய் சொல்கிறார்களா? தடுப்பூசி இல்லாததால் மக்கள் திருப்பி விடப்படுவதாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி அறிக்கைகள் போலியான தகவல்களை கூறுகிறதா? மத்தியிலும், மாநிலங்களுக்கும் இடையே மக்கள் முட்டாள்கள் போல தோற்றமளிக்கப்படுகிறார்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

41 seconds ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

14 minutes ago

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

37 minutes ago

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

8 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

10 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

11 hours ago