நிர்பயா வழக்கு:ஒட்டைகளை ஒன்றினைத்து குற்றவாளிகள் தப்பிக்க பார்த்ததை-நாடே பார்த்தது..!கெஜ்ரி ஆவேசம்

Default Image

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நிர்பயா குற்றவாளிகள் தப்பிக்க நினைத்ததை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தோம் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றச் சம்பவம் நடைபெற்று 7 வருடங்கள் கழிந்த நிலையில்  குற்றவாளிகள் 4 பேருக்கும்  இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தூக்கு மேடைக்கு செல்லும் சில நிமிடத்திற்கு முன்பு வரை கூட சட்ட போராட்டங்களை  குற்றவாளிகள் மேற்கொண்டனர்.  குற்றவாளிகளுள் ஒருவரான பவன் குப்தா சார்பில் இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று இரவே மேல்முறையீடு செய்யப்பட்டது.

இம்மனு மீதான விசாரணை இன்று அதிகாலை 2.45 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில்  நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “ஏபி சிங் “ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.ஒரே வாதத்தையே அனைத்து நீதிமன்றத்திலும் வைத்த ஏபி சிங்-கின் இந்த வாதத்தினை எதையும் நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.கூறியதையே திரும்ப திரும்ப கூறாமல் புதியதாக எதையாவது கூறுங்கள் என்று நீதிபகள் கோவத்தோடு கேட்ட நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது. மேலும் வழக்கு மிகச்சரியாக நடந்து இருக்கிறது. முறையான பாதையில்  வழக்கு சென்று உள்ளது. கருணை மனு அளிக்க 4 வருடங்கள் வரை நேரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு எதிரான தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்ட குறித்தப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டது.

20 நிமிடங்கள் தூக்கில் தொங்கியபடியே இருப்பார்கள் என்று சிறைத்துறை தகவல் தெரிவித்தது.இந்நிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது  குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் நிர்பயா வழக்கின் மூலம் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நிர்பயா குற்றவாளிகள் தப்பிக்க நினைத்ததை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தோம் என்று கெஜ்ரிவால் கடுமையான விமர்சனத்தையும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்