இன்று காலை, 10:00 மணிக்கு, ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், அரவிந்த் கெஜ்ரிவால் 3-முறையாக டெல்லி முதல்வர் பதவியை முத்தமிட்டு பதவியேற்கிறார். புதிய அமைச்சர்களும் உடன் பதவியேற்கின்றனர்.
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ஆம் தேதி மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியது.இந்நிலையில் நாளை காலை, 10:00 மணிக்கு, ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் அந்த பதவியேற்பு விழாவில், கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்கிறார் உடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில்,இவ்விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதுகுறித்து அக்கட்சியின் டில்லி ஒருங்கிணைப்பாளர் ராய் கூறியதாவது:பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. டில்லி எம்.பி மற்றும், புதிய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டில்லியை சார்ந்த விழா என்பதால் மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறினார்.
மேலும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள டில்லி மக்களுக்கும், கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து உள்ளார். இந்த அழைப்பை அக்கட்சி டில்லியில் வெளியாகும் செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில் விழா அழைப்பிதழை அச்சிடித்தும் அழைத்து வருகிறது.இதனால் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் மூன்றாவது முறையாக முதல்வராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் அவருக்கு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…