டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா.! அமித்ஷாவுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கலந்தாலோசித்துள்ளார்.
டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கலந்தாலோசித்துள்ளார்.
இதன் பின்னர், டெல்லிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துகொடுக்கும் என அமித்ஷா உறுதியளித்ததாக டெல்லி மூத்தவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.