சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாததிற்கு தடை.? கேரள நீதிமன்றம் உத்தரவு.!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் விநியோகிக்கப்படும் அரவணா பிரசாதத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரசாதமாக அரவணா பிரசாதத்தை வாங்கி செல்வர். அந்த அரவணா பிரசாதம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் ஏலக்காயில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பூச்சிக்கொல்லி இருப்பதாக கூறி கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த தடை உத்தரவை அடுத்து, தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் அரவணா பிரசாத வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றம் குறிப்பிட்டது போல, ஏலக்காய் இல்லாமல் ‘அரவணா’ தயார் செய்யும்படி தயாரிப்பு பிரிவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி தலைவர் கூறினார்.