“ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு ஒப்புதல் – பஞ்சாப் முதல்வர் ட்வீட்!
ஒரு எம்எல்ஏ-ஒரு ஓய்வூதியம் மசோதாவுக்கு பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
“ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதை பஞ்சாபியர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் பெருமளவு மிச்சமாகும் என தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் மாநிலத்தில் ‘ஒரு எம்எல்ஏ-ஒரு ஓய்வூதியம்’ சட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும். இது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். இன்று இந்த சட்டம் அமலுக்கு வருவதால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, ஒரு முறைக்கு மேல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் வெவ்வேறு பதவிக் காலங்களுக்கு ஓய்வூதியம் பெறுவது வழக்கம். ஆனால், இப்போது இந்த புதிய “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” சட்டம் மூலம் எம்எல்ஏக்களுக்கு ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும். தற்போது 250க்கும் மேற்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஆனால், இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இனி ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு ஒரு ஓய்வூதியம் மட்டுமே கிடைக்கும்.
मुझे पंजाबियों को यह बताते हुए बहुत ख़ुशी हो रही है कि माननीय राज्यपाल जी ने “एक विधायक-एक पेंशन” वाले बिल को मंज़ूरी दे दी है…सरकार ने नोटिफिकेशन जारी कर दिया है। इससे जनता का बहुत टैक्स बचेगा। pic.twitter.com/KvRN02PJ65
— Bhagwant Mann (@BhagwantMann) August 13, 2022