உச்சநீதிமன்றத்துக்கு மேலும் இரு நீதிபதிகள் நியமனம் – ஜனாதிபதி உத்தரவு
உச்சநீதிமன்றத்துக்கு மேலும் இரு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அறிவிப்பு.
உச்சநீதிமன்றத்துக்கு மேலும் இரு நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி மர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அகமதாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டாஸ் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
As per the provisions under the Constitution of India, Hon’ble President of India has appointed the following Chief Justices of High Courts as Judges of the Supreme Court. My best to them.
1.Rajesh Bindal, Chief Justice, Allahabad HC.
2.Aravind Kumar, Chief Justice, Gujarat HC— Kiren Rijiju (@KirenRijiju) February 10, 2023
உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் பதவியேற்பு:
இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகளின் காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில், 5 உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ‘கொலீஜியம்’ சமீபத்தில் பரிந்துரைத்தது. இதன்பின், கொலீஜியம் பரிந்துரைத்த, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிதல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமனுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரின் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதல் கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் சென்ற திங்கள்கிழமை பதவியேற்றனா். அவா்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தாா். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு மேலும் அகமதாபாத் மற்றும் குஜராத்தை சேர்ந்த இரு நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி மர்மு உத்தரவிட்டுள்ளார்.