பிரதமர் பாதுகாப்பு வைப்பு நிதியின் அறங்காவலராக ரத்தன் டாடா நியமனம்.!
பிரதமரின் பாதுகாப்பு நிதி (PM Cares)யின் அறங்காவலராக டாடா குழுமத்தின் நிறுவனர் திரு ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் மற்றும் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா ஆகியோர் பி எம் கேர்ஸ் (PM CARES) நிதியின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ராஜீவ் மெஹ்ரிஷி, இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி மற்றும் டீச் ஃபார் இந்தியா(Teach for India) இணை நிறுவனர் ஆனந்த் ஷா ஆகியோர் பி எம் கேர்ஸ் நிதியின் ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இது குறித்து பேசும் போது, புதிய அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களின் பங்களிப்பு பி எம் கேர்ஸ்(PM CARES) நிதியின் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் கொரோனா கால கட்டத்தில் அவசரகால நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பி எம் கேர்ஸ்(PM CARES) நிதி உருவாக்கப்பட்டது. மார்ச் 2020 முதல் பிப்ரவரி 2022 க்கு இடையில் கொரோனாவினால் பெற்றோர்கள் மற்றும் வளர்ப்பு பெற்றோர்கள் ஆகியோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதி குழந்தைகளுக்கான பி எம் கேர்ஸ்(PM CARES) உருவாக்கப்பட்டது.