தலைமை தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.
தலைமை தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது என உச்சநீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது. புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அருண் கோயலை நியமித்தது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. மே மாதத்தில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி நவ.17-ல் உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்க தொடங்கிய பிறகு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
18-ஆம் தேதி வழக்கை விசாரிக்க இருந்த நிலையில், அதே நாளில் தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு அருண் கோயல் பெயரை பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார். மே 15 முதல் நவம்பர் 18 வரை ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அதுவரை என்ன செய்தீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், 4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜோசப் தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…