இன்றே விண்ணப்பீர்கள்; 7500 காலிப்பணியிடங்கள் ! மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு.!
மத்திய பணியாளர் தேர்வாணையம் 7500 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), SSC CGL தேர்வு 2023 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 7500 பணியிடங்களை நிரப்புவதற்கு, CGL தேர்வு 2023 மூலம் தேர்ந்தெடுப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தகுந்த விண்ணப்பதாரர்கள் மே 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் SSC இன் அதிகாரபூர்வ இணையதளமான http://ssc.nic.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வியை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் இடஒதுக்கீட்டிற்குத் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் (SC & ST) மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (ESM) உள்ளிட்டவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி மே 4, என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதற்கு முன்னதாக விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள்.