நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் அரசு தப்புமா..? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..!
இதில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஹேமந்த் சோரன் கைது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி மக்களவை எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி மக்களவையில் இன்று பேசுகிறார்.
இதனால், மக்களவைக்கு இன்று அனைத்து பா.ஜ.க. எம்.பி.க்களும் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் இந்த அமர்வு எதிர்ப்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. மேலும், இன்று மக்களவையில் 10 ஆண்டு கால சாதனைகளை குறித்து விரிவாக பிரதமர் பேசுவார் என்றும் எதிர்க்கட்சிகள் குறித்தும் விமர்சனம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…