ஆப்கள் மூலம் உணவுகள் ஆர்டர் ?கார்த்தி சிதம்பரம் பிடிவாதம் ?
ஸ்விக்கி (Swiggy), ஸொமாட்டோ (Zomato) ஆப்கள் மூலம் சி.பி.ஐ. காவலில் உள்ள கார்த்தி சிதம்பரம், உணவுகளை ஆர்டர் செய்து தருமாறு கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், வெளிநாட்டிலிருந்து முதலீடு திரட்ட முறைகேடாக உதவியதாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
அவரை 5 நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க அனுமதியளித்த நீதிமன்றம், வீட்டு உணவுகளை வழங்கக் கூடாது என உத்தரவிட்டது. இதனால், அவர் ஸ்விக்கி, ஸொமாட்டோ போன்ற ஆப்கள் மூலம் உணவுகளை வரவழைக்குமாறு கேட்பதாக, சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.