பொட்டு வைத்து தேங்காய் உடைக்கப்பட்டு பூஜையுடன் வரவேற்கப்பட்ட அப்பாச்சி ரக போர் விமானங்கள்!
இந்திய விமானப்படையில் தற்போது புதியதாக அப்பாச்சி AH 64a ரக போர் விமானங்கள் மொத்தம் 8 போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை அமெரிக்காவை சேர்ந்த போயிங் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த போர் விமானத்தில் இருவர் பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் விமானத்தினை இயக்க, இன்னொருவர் ஆயுதங்களை கையாளும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரக விமானத்தை உபயோகப்படுத்த விமானப்படை வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி நடைபெற்று பின்னர் இந்த விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவர்.
இந்த போர் விமானத்தில் தொடர்ச்சியாக 1200 குண்டுகளை வெளியிட்டு தாக்குதல் நடத்த முடியும். இதன் சக்கரங்களின் கிழேயும் குண்டு செலுத்தும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இருளிலும் இலக்கை சரியாக கணிக்கும் வகையில் தொலைநோக்கிகள் இதில் பொருத்தப்பட்டுள்ள்ளன.
இந்த வகை விமானங்களை அமெரிக்க, கிரீஸ், பிரிட்டன், அரபு நாடுகள், சிங்கப்பூர் என இன்னும் சில நாடுகள் இந்த ரக போர் விமானங்களை வைத்துள்ளன. தற்போது இந்த ரக விமானங்களை இந்தியாவும் வாங்கியுள்ளது.
இந்த விமானங்களுக்கு பஞ்சாப் பதன்கோட்டில் இன்று இந்திய ராணுவத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பச்சி விமானங்களுக்கு பொட்டு வைக்கப்பட்டு, தேங்காய் உடைத்து கும்பிட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.