பண மோசடி புகார் காரணமாக சேலத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் உண்டு உறைவிடப் பள்ளியில் வெங்கடேசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வாருகிறார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து, இவர் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு மாணவர் விடுதிகளில் சமையல் பணிக்கு போலியாக ஆள் நியமனம் செய்தது தொடர்பாகவும் இவர் மீது புகார் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அரசு பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் அவர்கள் வீட்டில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை…
மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன…
ரவை பலரும் வெறுக்கும் உணவாக இருந்தாலும் அது ஒரு சிறந்த சிற்றுண்டி எனலாம் . அதன் ஆரோக்கிய நன்மைகளை இந்த…
டோக்கியோ: திபெத், நேபாளத்தை தொடர்ந்து, ஜப்பானிலும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானில் உள்ள டோரிஷிமா தீவுப்…
ஈரோடு : இந்திய தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தற்போது 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லி…