தெலுங்கானாவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘ஆன்டி-கொரோனா டீ’!

தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆன்ட்டி கொரோனா எனும் தேநீர் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்களாம்.
கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இந்தியாவிலும் பல லட்சங்களை கடந்து இதன் பாதிப்பு சென்று கொண்டே உள்ளது. இந்நிலையில் தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் எனும் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆன்டி கொரோனா எனும் தேயிலை மற்றும் தேநீர் விற்பனை அமோகமாக நடைபெறுகிறதாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது என்றும் இதன்மூலம் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கடை உரிமையாளர் சிவா கூறும்பொழுது ஆண்டி கொரோனா எனும் பெயரில் நாங்கள் இந்தத் தேநீர் விற்பனை செய்கிறோம். இதில் இஞ்சி, கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை தூள் போன்ற இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருட்களை தான் சேர்த்துள்ளோம். இந்த தேநீரை கொரானா வைரஸ் தொற்று அதிகரிப்பின் போது விற்க ஆரம்பித்தோம் தற்பொழுது இதை இங்கு உள்ள பலர் விரும்பி குடித்து வருகின்றனர் என கடை உரிமையாளர் சிவா கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து கூறிய வாடிக்கையாளர் ஒருவர் நான் எனது வீட்டிற்கு தினமும் வாங்கி சென்று பாலில் கலந்து குடிப்பேன் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்றாக உள்ளது ஒரு நாளைக்கு 3 முறை இதைக் குடித்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025