Breaking: டெல்லியில் மேலும் ஒரு வாரம் பொது முடக்கம் நீட்டிப்பு..!
டெல்லியில் மேலும் ஒரு வாரம் பொது முடக்கம் நீட்டித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருக்கிறார்.
டெல்லியில் மேலும் ஒரு வாரம் பொது முடக்கம் விதிக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடியவிருந்த நிலையில், வரும் 24ஆம் தேதி காலை 5 மணி வரை அந்த முழுக் ஊடகத்தை நீட்டித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு வரை தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக இருந்தது. பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இரண்டுமே அதிகமாக இருந்த நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக டெல்லியில் அந்த பாதிப்பு விகிதமானது குறைந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் மற்ற மாநிலங்களைப் போல மாதக் கணக்கிலோ அல்லது இரண்டு வாரம் அல்லது மூன்று வாரம் என்று மொத்தமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படாமல் ஒரு வாரத்திற்கு ஒரு முறை தான் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.