வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அம்ரித்பால் சிங் வெளியிட்ட மற்றொரு வீடியோ.!

Default Image

காவல்துறையில் சரணடைவது பற்றி பரவும் வதந்திகளை மறுத்து, அம்ரித்பால் சிங் மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் மற்றும் காலிஸ்தானி ஆதரவாளருமான காவல்துறையால் தேடப்பட்டுவரும் அம்ரித்பால் சிங், தனது முதல் வீடியோ வெளியிட்ட ஒருநாள் கழித்து மற்றொரு வீடீயோவை வெளியிட்டுள்ளார். அம்ரித்பால் சிங் தனது இரண்டாவது வீடியோவில், காவல்துறையில் சரணடைவதற்கு தான் மூன்று நிபந்தனைகளை வைத்ததாக, பரவும் வதந்திகளை மறுத்துள்ளார்.

மேலும் சரணடைவது பற்றி தான் பேசவில்லை என்று கூறியுள்ளார். அம்ரித்பால் சிங் தனது வீடியோவில் கூறியதாவது, நான் ஒரு பகோடா (ஓடுபவன்) அல்லது நான் என் நண்பர்களை விட்டு வெளியேறிவிட்டேன் என்று நினைக்க வேண்டாம். மரணம் வரும்போது ஏற்றுக்கொள்வேன். அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

ஆனால் சத்குரு சச்சே பாட்ஷா ஒரு காரணத்திற்காக என்னை விடுவித்துள்ளார், அதனால் நான் இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் ஏதாவது செய்ய முடியும் என எண்ணுகிறேன். எதிர்ப்பின் பாதை கடினமானது மற்றும் நிறைய போராட வேண்டும். ஆதரவளித்தவர்களுக்கு எனது நன்றிகள். எதிர்த்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் யாருக்கும் எதிராக பேச மாட்டேன்.

நான் ஏற்கனவே எனது சோதனையை கடந்து வருகிறேன். சமூகத்தின் உரிமைகளுக்காக நீங்கள் எவ்வளவு உறுதியாக நிற்பீர்கள் என்பதுதான் உங்கள் சோதனை. சமூகத்தை அணிதிரட்டி சமூகத்திற்காக ஒன்றுபட்டு நிற்பதே தேவை. நாம் இந்த பூமியிலிருந்து வந்தோம், எங்கள் இரத்தம் இந்த பூமியில் உறிஞ்சப்படும்.

சரணடைவதற்கு நான் காவல் நிலையத்தில் அடிபடக் கூடாது என மூன்று நிபந்தனைகளை விதித்ததாக ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்பட்டன. என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடித்து விடுங்கள். நான் சித்திரவதை அல்லது சிறைக்கு அஞ்சவில்லை.

இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன், சமூகம் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும் வலுவாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் வீடியோவில் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Geethajeevan
Yogi Babu
Southwest Bay of Bengal
M K Stalin
chicken pox (1)
orange alert tn