மீண்டும் ஒரு துயரச் சம்பவம்….ராணுவ விமானம் விபத்து – விங் கமாண்டர் பலி!

Default Image

ராஜஸ்தான்:ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம்,நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில்,விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார்.இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த டிச.8 ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள்,பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,ராஜஸ்தான் மாநிலம்,ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம்,நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில்,விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார்.இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மிக் 21 ரக விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து,வனக்காவலர் ஒருவர் தகவல் அளித்ததும் விமானப்படை குழுவுடன் உள்ளூர் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர்.மேலும்,விமானம் தரையில் விழும் முன் தீப்பிடித்து எரிந்ததாக  உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்த சாட்சி ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும்,இது தொடர்பாக,ஜெய்சால்மர் எஸ்பி அஜய் சிங் கூறுகையில்: “இந்திய விமானப்படையின் மிக் 21 விமானம் பாலைவன தேசிய பூங்காவின் (டிஎன்பி) பகுதியில் சாம் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அப்பகுதியில் இருந்த வனக் காவலர் ஒருவர் MiG-21 விமானத்தின் சிதைந்த பகுதிகளை கண்டு,அதன் பிறகு உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்”,என்று கூறினார்.

இதனையடுத்து,விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா மறைவுக்கு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்து,தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:“இன்று (டிச.24 ஆம் தேதி) இரவு 8:30 மணியளவில், IAF இன் MiG 21 விமானம் ஒரு பயிற்சியின் போது மேற்குத் துறையில் பறந்து விபத்துக்குள்ளானது.மேலும் விவரங்களுக்கு காத்திருக்கின்றோம்.இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹாவின் சோகமான மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் IAF தெரிவிக்கிறது மற்றும் துணிச்சலான இதயத்தியுடைய அவரது குடும்பத்துடன் IAF உறுதியாக நிற்கிறது”,என்று தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹாவின் மறைவுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்:

“விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா,பயிற்சியின் போது,மேற்கு செக்டரில் பறந்து கொண்டிருந்த மிக்-21 விமானம் விபத்தில் சிக்கியதில், அவர் உயிரிழந்தார் என்பதை அறிந்து வருத்தமடைந்தேன்.அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.அவர்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்,அவர்கள் வலிமை பெற பிரார்த்திக்கிறோம்”,என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்