மணிப்பூரில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…! பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை காவலர் கைது…!

தலைமை காவலர் ஒருவர் மளிகை கடைக்குள் நுழைந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலம், இம்பாலில் மளிகை கடைக்குள் நுழைந்த எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் ஒருவர் அங்கிருந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பெண்ணை அவர் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து, தற்போது அவர் எல்லை பாதுகாப்பு படையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் குற்றம் சாட்டப்பட்ட தலைமை காவலர் சதீஷ் பிரசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தௌபல் மாவட்டத்தில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துக் கொண்டு, அணிவகுத்துச் செல்லும் வீடியோ வைரலானது. இது நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்திய நிலையில், மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.