இந்தியாவில் மேலும் ஒரு பிளாஸ்மா வங்கி.. திறந்து வைத்த முதல்வர் கெஜ்ரிவால்!

Default Image

டெல்லியில் மேலும் ஒரு பிளாஸ்மா சிகிச்சை வங்கியை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,13,740 ஆக அதிகரித்தது.

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 3,411 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை பலனளித்து வருகிறது.

இதன்காரணமாக நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி, டெல்லியில் உள்ள ILBS மருத்துவமனையில் ஜூலை மாதம், 3 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுமாறு மக்களுக்கு டெல்லி முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், இது எந்த வலியையும், பலவீனத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார்.

 இதனையடுத்து, பிளாஸ்மா தானம் செய்ய பலரும் முன்வந்திருந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள லோக்நாயக் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ப்ளாஸ்மா வங்கியை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார்.

பிளாஸ்மா சிகிச்சை:

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள “ஆன்டிபாடி” எனும் நோய்எதிர்ப்புசக்தியை பிரித்து எடுத்து கொரோனா பாதித்த நபருக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன்மூலம் அந்த நபர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவதுடன், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பிளாஸ்மா தானம் செய்பவர்களின் வயது வரம்பு, 18-60 வரை இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்