டேராடூன்-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மற்றொரு பகுதியும் இடிந்து விழுந்தது..!
டேராடூன்-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் உள்ள ஜகான் ஆற்றின் பாலத்தின் மற்றோரு பகுதி கனமழை காரணமாக இடிந்து விழுந்தது.
உத்தரகண்ட் மாநிலத்தில் மழை பெய்து வருவதால் பல இடங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் நிரம்பி வருவதை கண்டு மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், இன்று பிற்பகல் ரிஷிகேஷ்-டேராடூன் சாலையில் ஜகான் ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தின் பெரும் பகுதி இடிந்து விழுந்தது.
அதே நேரத்தில், இந்த பாலத்தின் மற்றொரு தூண் சற்று நேரத்திற்கு முன் இடிந்தது. பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறிய சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு கார் சிக்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர் காயமடைந்தார். நீரின் வேகம் காரணமாக, ஜகான் ஆற்றின் பாலம் நடுவில் இருந்து உடைந்துவிட்டது. பாலம் உடைந்தபோது அவ்வழியாக சென்ற சில வாகனங்கள் கீழே விழுந்தன.
சில இருசக்கர வாகன ஓட்டிகளும் உயிர் தப்பினர். பெரிய அளவில் உயிர்சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கூறப்படுகிறது.
#WATCH | Uttarakhand: A portion of a bridge over the Jakhan river on Dehradun-Rishikesh highway in Ranipokhari collapses. pic.twitter.com/x9rjWoibA0
— ANI (@ANI) August 27, 2021