இந்திய-பாக் எல்லையில் மற்றொரு பாகிஸ்தான் டிரோனை இந்திய ராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர்.
பஞ்சாபில் உள்ள டர்ன் தரான் மாவட்டமான இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான எல்லைப்பகுதியில், எல்லைப் பாதுகாப்பு படையினர்(BSF) டிரோன் விமானத்தை பிடித்துள்ளனர். டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள பல்லோபதி கிராமத்தில் இந்த டிரோன் விமானம் பறப்பதை பார்த்த பாதுகாப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இந்த பாகிஸ்தானை சேர்ந்த ட்ரோன் விமானம் குவாட்காப்டர் மாடல் – டிஜேஐ மெட்ரிஸ் 350 ஆர்டிகே சீரிஸ் எனும் வகையைச் சேர்ந்தது என எல்லைப் பாதுகாப்பு படையினர்(BSF) தெரிவித்தனர். மேலும் கடந்த ஜூன் 28 ஆமா தேதி இதேபோல் பஞ்சாபின் டர்ன் தரான் மாவட்டத்தில் இந்திய வான்வெளியில், அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் டிரோன் விமானம் இந்திய எல்லைப்பகுதியில் பறந்துள்ளதால், அப்பகுதியை நோட்டமிட பாகிஸ்தான் அனுப்பிய இந்த டிரோன் விமானத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த டிரோன் விமானம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…