இந்திய எல்லையில் மற்றுமொரு பாகிஸ்தான் டிரோன் பறந்ததால் பரபரப்பு… மீட்ட இந்திய ராணுவம்.!

Pak Drone

இந்திய-பாக் எல்லையில் மற்றொரு பாகிஸ்தான் டிரோனை இந்திய ராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர்.

பஞ்சாபில் உள்ள டர்ன் தரான் மாவட்டமான இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான எல்லைப்பகுதியில், எல்லைப் பாதுகாப்பு படையினர்(BSF) டிரோன் விமானத்தை பிடித்துள்ளனர். டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள பல்லோபதி கிராமத்தில் இந்த டிரோன் விமானம் பறப்பதை பார்த்த பாதுகாப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இந்த பாகிஸ்தானை சேர்ந்த ட்ரோன் விமானம் குவாட்காப்டர் மாடல் – டிஜேஐ மெட்ரிஸ் 350 ஆர்டிகே சீரிஸ் எனும் வகையைச் சேர்ந்தது என எல்லைப் பாதுகாப்பு படையினர்(BSF) தெரிவித்தனர். மேலும் கடந்த ஜூன் 28 ஆமா தேதி இதேபோல் பஞ்சாபின் டர்ன் தரான் மாவட்டத்தில் இந்திய வான்வெளியில், அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் டிரோன் விமானம் இந்திய எல்லைப்பகுதியில் பறந்துள்ளதால், அப்பகுதியை நோட்டமிட பாகிஸ்தான் அனுப்பிய இந்த டிரோன் விமானத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த டிரோன் விமானம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்