புதுச்சேரியில் கொரோனாவால் மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு..!
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் மேலும் ஒரு செவிலியர்உயிரிழப்பு.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்றால்பொதுமக்கள் செவிலியர்கள் போன்ற பலர் உயிரிழந்து வருகின்றார்கள். அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக செவிலியர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த 45 வயதான சசி பிரபா என்ற செவிலியர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் புதுச்சேரியில் இதுவரை 10க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.