கொரோனா வைரஸ் தடுப்பதற்கான மற்றொரு புதிய தடுப்பூசி ஹைதராபாத் “பயாலாஜிக்கல் இ ” நிறுவனம் உருவாக்கி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், “பயாலாஜிக்கல் இ ” என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முடிந்து விட்டன. “பயாலாஜிக்கல் இ ” நிறுவனத்தின் புதிய தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை விரைவில் தொடங்கவுள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் பொதுமக்கள் அதை போட்டுக்கொள்வதற்க்கான அனுமதியை அரசு அளிக்கும்.
ஆகஸ்ட் மாதத்தில் “பயாலாஜிக்கல் இ ” நிறுவனம் தயாரித்து வரும் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க இந்திய ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்ட தடுப்பூசியாக “பயாலாஜிக்கல் இ ” நிறுவனம் தயாரிப்பு இருக்கும். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷில்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் தற்போது இந்தியாவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ரஷ்ய உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. “பயாலாஜிக்கல் இ ” நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தால் இந்தியாவில் இது 4-வது தடுப்பூசியாக இருக்கும். மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் வாரத்துக்கு ஏழு கோடி தடுப்பூசியை தங்கள் நிறுவனம் தயாரிக்கும் என பயாலாஜிக்கல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…