Categories: இந்தியா

அக்னி வீரர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு.! பிஎஸ்எஃப்- ஐ தொடர்ந்து சிஐஎஸ்எஃப்-இலும் சேருவதற்கு சலுகைகள்..

Published by
மணிகண்டன்

மத்திய பாதுகாப்பு படையான CISF-இல் காலியாக உள்ள பணியிடங்களில் முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய தேசிய முப்படைகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அக்னி வீரர்கள் எனும் திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 வருடம் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு ஒரு சிலரே அந்த பணியில் நீட்டிக்கப்டுகின்றனர்.

10 சதவீத இடஒதுக்கீடு :

அக்னி வீரர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுக்கு ஏற்கனவே எல்லை பாதுகாப்பு படையான BSF-இல் சேருவதற்கு 10 சதவீத இடஒதுக்கீடு உளிட்ட சலுகைகளை வழங்கியது.

CISF காலிப்பணியிடங்கள் :

தற்போது அதே போல அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு படையான CISF-இல் சேருவதற்கு சலுகைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள்ளது . அதன் படி ,  CISF-இல் காலியாக பணியிடங்களில் சேருவதற்கு 10 சதவீத இடஒதுக்கீடு மற்றும்  உயர் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்ச வயது வரம்பில் முன்னாள் அக்னிவீரர்களின் முதல் வகுப்பு வீரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலும், மற்ற வகுப்பு வேட்பாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலும் தளர்வு அளிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் =,  அவர்களுக்கு உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…

4 hours ago

களைகட்டிய பொங்கல் : அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்டோர் வருகை!

சென்னை :  பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…

5 hours ago

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

6 hours ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

6 hours ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

7 hours ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

7 hours ago