மேலும் ஒரு பாஜக எம்பியான ஜெயந்த் சின்ஹா விலகுவதாக அறிவிப்பு!

Jayant Sinha

Jayant Sinha : கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது நபராக ஜெயந்த் சின்ஹாவும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இம்மாதம் வெளியாக இருக்கும்  நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  அனைத்து மாநில கட்சிகளும் தேர்தலுக்கு ஆயுதமாகி வருகின்றனர். இந்த சூழலில் பாஜகவில் இருந்து அடுத்தடுத்து எம்பிகள் விலகி வருவது பேசும்பொருளாக மாறியுள்ளது.

Read More – அரசியல் பொறுப்பில் இருந்து என்னை விடுவிங்கள்… பாஜக தலைமைக்கு கம்பீர் திடீர் கோரிக்கை!

அதன்படி, இன்று காலை கிழக்கு டெல்லி எம்பியும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரருமான கவுதம் கம்பீர், கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்கு, அதில் பொறுப்புகள் இருப்பதாலும், அரசியல் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

கவுதம் கம்பீரின் இந்த முடிவு குறித்து ரசிகர்கள் மற்றும் பாஜகவினர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது நபராக ஜெயந்த் சின்ஹாவும் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Read More – மங்களூரு குண்டுவெடிப்புக்கும் பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் சம்பந்தமில்லை.! சித்தராமையா பேட்டி.!

இதுதொடர்பாக  அவரது எக்ஸ் வலைதள பதிவில், இந்தியா மட்டுமின்றி உலகளாவிய காலநிலை மாற்றம் தொடர்பான தனது வேலைகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், தன்னை தேர்தல் அரசியலில் இருந்து விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், பொருளாதாரம் மற்றும் ஆட்சி விவகாரங்களில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன். கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இதனை உருவாக்கி கொடுத்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Read More – அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு படையெடுத்த உலக பிரபலங்கள்.! ஸ்பெஷல் அந்தஸ்து பெற்ற உள்ளூர் ஏர்போர்ட்.!

இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து கடந்த இரண்டு முறையும் ஜெயந்த் சின்ஹா மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். எனவே, மக்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக எம்பிக்கள் அடுத்தடுத்து விலகி வருவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்