காஷ்மீரில் 52 வெடிபொருட்கள் கண்டெடுத்து, புல்வாமா தாக்குதல் போன்ற மற்றோரு தாக்குதல் நடக்காமல் இந்திய ராணுவம் ராணுவம் முன்பே முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் நேற்று காலை 8 மணியளவில் கடிகல் பகுதியில் கரேவா என்ற இடத்தில் ஒரு பழத்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பற்றிய ரகசிய தகவல், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு தெரிய வந்தது. அந்த நீர் தொட்டியில் 52 கிலோகிராம் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் 125 கிராம் கொண்ட 416 பாக்கெட் வெடிபொருட்கள் இருந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்ட போது, அதேபோன்ற தொட்டி ஒன்றில் 50 டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிபொருள் “சூப்பர் 90” என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 2019ல் இதே பகுதியில் நடந்த புல்வாமா தாக்குதலில் இருந்து 9 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்த அந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கு பின்னணியாக செயல்பட்ட பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், அப்பகுதியில் 52 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை தற்போது இந்திய ராணுவம் கண்டறியப்பட்டு, புல்வாமா தாக்குதல் போன்ற மற்றோரு தாக்குதல் நடக்காமல் நம்நாட்டு ராணுவம் முன்பே முறியடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…