ஆபரேசன் கங்கா:மேலும்,242 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் வருகை!
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 16-வது நாள் இன்றும் ஆகிறது. உக்ரைனில் ரஷ்யா ராணுவப்படை ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் விதித்து வருகிறது.
அதே வேளையில்,போர் காரணமாக உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா சமீபத்தில் தெரிவித்தது.மேலும்,இந்த சண்டையில் இதுவரை 300-க்கும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதனிடையே,ஆபரேசன் கங்கா கீழ் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில்,ஆபரேஷன் கங்காவின் கீழ்,உக்ரைனின் சுமியில் இருந்து வெளியேறி போலந்து சென்ற மேலும் 242 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சுமியிலிருந்து வெளியேற்றப்பட்ட 600 மாணவர்களைக் கொண்ட ஒரு பெரிய குழுவைத் திரும்பக் கொண்டுவர இந்தியா மூன்று சிறப்பு விமானங்களை போலந்திற்கு அனுப்பிய நிலையில்,242 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்துள்ளனர்.
அதன்படி,உக்ரைனில் இருந்து பத்திரமாக அழைத்து வரப்பட்ட மாணவர்களை மத்திய அமைச்சர் அனுராக்தாகூர் வரவேற்றார்.
Welcome back home ????????!
Union Minister @ianuragthakur receives students who returned from #Ukraine via #OperationGanga this morning. pic.twitter.com/G5A4y0dIdq
— PIB India (@PIB_India) March 11, 2022
மேலும்,இரண்டு விமானங்களும் மாணவர்களை மீட்டு இன்று டெல்லி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது