பெங்களூரில் வருடாந்திர கேக் கண்காட்சி ஆசிரியத்தில் மக்கள்.!
- பெங்களூரில் நடைபெற்று வரும் வருடாந்திர கேக் கண்காட்சி.
- கேக்குகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு உருவங்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூரில் நடைபெற்று வரும் வருடாந்திர கேக் கண்காட்சி கடந்த 13-ம் தேதி துவங்கப்பட்ட இந்த கண்காட்சியில் கேக்குகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு உருவங்கள், ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள பிரபல கேதட்ரல் தேவாலயம், சாண்டா கிளாஸ் சவாரி, கொரில்லா குரங்கு, நரிகளின் இருப்பிடம், கதக்களி ஆடும் மனிதன், இந்து கடவுள் கிருஷ்ணன், ராக்கெட் போன்ற ஏராளமான உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனால் அங்கு வரும் பார்வையாளர்கள் அவற்றை ஆச்சரியத்துடன் ரசித்து, செல்போன்களில் புகைப்படங்களும் எடுத்து செல்கின்றனர்.
இது போன்று காட்சிகள் வெளிநாடுகளில் தான் அதிகம் காணப்படும். இப்பொது பெங்களூரில் நடந்துள்ளது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.