நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார தொகுப்பு விவரங்களை அறிவிக்கவுள்ளார்.
நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலமாக மோடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இந்த நிதித் தொகுப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 10 சதவீதம் என்ற அளவுக்கு பெரிய நிதித் தொகுப்பாக இருக்கும். சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள் உள்ளிட்ட பல துறையினருக்கும் இந்த நிதி ஊக்கமளிக்கும்.
உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை வாங்குவதற்கு ஒவ்வொரு இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டிய நேரம் இது. மேலும் 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் அது குறித்த அறிவிப்பு மே 18-ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். இந்த 4-ம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார தொகுப்பு விவரங்களை நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று மோடி கூறினார்.கடந்த மார்ச் மாதம் ரூ .1.7 லட்சம் கோடி நிவாரண திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால் இந்த நிதி போதாது என்று அப்போது விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…