வங்கிகளுக்கு ரெப்போ வட்டி விகிதம் 0.25 விழுக்காடு குறைப்பு ! வீட்டுக் கடன், வாகன கடன் மீதான வட்டி குறைய வாய்ப்பு
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று மும்பையில் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 6%லிருந்து குறைத்து அறிவித்தது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதன்படி வங்கிகளுக்கு ரெப்போ வட்டி விகிதம் 0.25 விழுக்காடு குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதமாக குறைத்துள்ளது.வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீட்டு கடன்,வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.மேலும் ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இணையதள பணபரிமாற்ற கட்டணங்களை நீக்கவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.