மத்திய – மாநில நிதித்துறை செயலர்கள் கூட்டம் செப்.1-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!
வருவாய் இழப்பீடு குறித்து மாநிலங்கள் முடிவெடுக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 1ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி காட்சி மூலம் நேற்று முன்தினம் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை செயலாளர்கள் பங்கேற்றனர். அப்போது, 2019-20ம் ஆண்டில் மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1,65000 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், ரூ. 95,444 கோடி மட்டும் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்திருந்தார்.
மேலும், இதனை ஈடுகட்ட மாநில அரசுகள் இருவழியில் கடன் பெற்றுக் கொள்ள நடப்பு ஆண்டில் மட்டும் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதலாவதாக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.97,000 கோடி கடன் பெற்றுக் கொள்ளலாம். நியாயமான வட்டியுடன் இந்த கடன் தொகையை ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மாநில அரசுகள் கடன் பெறும் வரம்பை 0.5% உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது என 2வது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், எதாவது ஒரு வாய்ப்பை தேர்தெடுத்து, அடுத்த ஒரு வாரத்திற்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே, இந்த கூட்டத்தில் பேசிய, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இழப்பீடு தொகையை ஈடுகட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க போவதில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில நிதித்துறை செயலர்கள் கூட்டம் செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. வருவாய் இழப்பீடு குறித்து மாநிலங்கள் முடிவெடுக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
States have to communicate their preference within seven working days.
A meeting of State Finance Secretaries with the Union Finance Secretary and Secretary (Expenditure) is scheduled to be held on 1st September, 2020 for clarifying issues, if any.— Ministry of Finance (@FinMinIndia) August 29, 2020