காங்கிரஸ் – இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிப்பு.!
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்னும் ஒருசில மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பிரச்சாரங்களை அந்தந்த மாநிலங்களில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக தொடங்கிவிட்டன. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோர் உள்ளார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் என்றாலே திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இக்கட்சிகளுக்கு இடையே போட்டி நடைபெறும். ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக இரண்டாம் இடம் பிடித்து சப்ரைஸ் என்ட்ரி கொடுத்தது. இதற்கு முந்தைய 2014 தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே பிடித்திருந்த பாஜக அடுத்த தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடித்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்ட மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியடைந்தது.
இந்நிலையில், வரப்போகின்ற மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மேற்கு வங்கத்தின் வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் – இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Today the Congress High command has formally approved the electoral alliance with the #Left parties in the impending election of West Bengal.@INCIndia@INCWestBengal
— Adhir Chowdhury (@adhirrcinc) December 24, 2020