“தற்போதைய வாடிக்கையாளர்களை பாதிக்காது;RBI அனுமதித்த பிறகு புதிய கணக்குகள்” -Paytm நிறுவனம் முக்கிய தகவல்!

Default Image

பணபரிவர்த்தனை விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் Paytm payment வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.  தகவல் தொழில்நுட்ப தணிக்கை குழுவின் ஆய்வுக்கு பின் அனுமதி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கு உடனடியாக தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் வங்கியின் ஐடி அமைப்பை தணிக்கை செய்ய ஐடி தணிக்கை நிறுவனம் ஒன்றை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டுமெனில், ஐடி தணிக்கையாளர்களின் அறிக்கையை பார்த்தபின், ரிசர்வ் வங்கியிடம் உரிய அனுமதி பெற்று சேர்க்க வேண்டும். பேடிஎம் வங்கியில் கண்காணிப்பு பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு இணங்க உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,பேடிஎம் நிறுவனம் கூறியதாவது:

“ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க நாங்கள் உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.ரிசர்வ் வங்கியின் உத்தரவை விரைவாக நிவர்த்தி செய்ய ஒழுங்குமுறை அதிகாரியுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது.அதன்படி,RBI அனுமதியைப் பெற்ற பிறகு புதிய கணக்குகளை மீண்டும் தொடங்குவது குறித்து நாங்கள் அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளது.

மேலும்,ஆர்பிஐ-யின் இந்த அறிவிப்பு தற்போதைய வாடிக்கையாளர்களை பாதிக்காது,அவர்கள் அனைத்து வங்கி மற்றும் கட்டணச் சேவைகளையும் தடையின்றி தொடர்ந்து பயன்படுத்த முடியும். Paytm UPI, Paytm Wallet, Paytm FASTag மற்றும் வங்கிக் கணக்குகளின் தற்போதைய அனைத்துப் பயனர்களும், டெபிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் உள்ளிட்ட இந்தக் கருவிகளைப் பணம் செலுத்துவதற்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும்,புதிய பயனர்கள் Paytm பயன்பாட்டில்(Paytm app) பதிவுசெய்து,UPI ஐ உருவாக்கி, அவற்றைத் தங்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதன் மூலம் பரிவர்த்தனை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்