கர்நாடக தேர்தல் – பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்..!
கர்நாடக தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக, மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம்.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் – மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் நட்டா, கர்நாடக தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக, மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்துள்ளார்.